இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்கிழமை(03-03-2020)
இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்கிழமை(03-03-2020)
#இன்றையபஞ்சாங்கம்
3-மார்ச்-2020
சூரியோதயம் : 6:37 am சந்திரௌதயம் : 12:23 pm
சூரியாஸ்தமனம் : 6:25 pm சந்திராஸ்தமனம் : 01:33 am
சூரியன்ராசி : கும்பம்
சந்திரன்ராசி : மிதுனம்
மாதம் : மாசி 20"ம் நாள்
பக்ஷம் : சுக்ல பக்ஷம்
___________________________
____________________________
#பஞ்சாங்கம்
1⃣,வாரம் : செவ்வாய்
2⃣,திதி : அஷ்டமி இறுதி 01:50 pm நவமி
3⃣,நட்சத்திரம் : ரோகிணி இறுதி 10:32 am மிருகசீரிடம்
4⃣,யோகம் : விஷ்கம்பம் இறுதி 12:23 pm priti
5⃣,கரணம் :பவம் 01:50 pm
பாலவம் 02:01 am
#நல்ல_நேரம்
அபிஜித் : 12:07 pm – 12:55 pm
அமிர்த காலம் : 07:06 am – 08:49 am
ஆனந்ததி யோகம் : 10:32 am Rakshasa
☻#கெட்ட_நேரம்☻
ராகுகாலம் : 2:59 pm – 4:15 pm
யம கண்டம் : 9:52 am – 11:08 am
தியாஜ்யம் : 16:20 pm – 17:59 pm
குளிகன் : 12:25 pm – 1:42 pm
#துர்முஹுர்த்தம்
1. 09:21 am – 10:02 am
2. 11:03 pm – 11:58 pm
#அமிர்தயோகம் பகல் 10.31 வரை பின்பு #சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
#சுப_ஹோரைகள்
காலை 8.00-9.00,
மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00,
இரவு 07.00-08.00, 10.00-12.00.
#சந்திராஷ்டமம்
#விசாகம்
#இன்றைய_ராசிப்பலன்
#aries_மேஷம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.
#taurus_ரிஷபம்
இன்று எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலங்கள் கிட்டும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.
#gemini_மிதுனம்
இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
#cancer_கடகம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
#leo_சிம்மம்
இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.
#virgo_கன்னி
இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் கிட்டும்.
#libra_துலாம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தூரப் பயணங்களில் கவனமுடன் செல்வது நல்லது.
#scorpio_விருச்சிகம்
இன்று இல்லத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.
#sagittarius_தனுசு
இன்று உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
#capricorn_மகரம்
இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல், பணவிரயங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
#aquarius_கும்பம்
இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
#pisces_மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ௐ நமச்சிவாய:
What's Your Reaction?