திருக்குறள் - குறள் 915

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: வரைவின்மகளிர்.


திருக்குறள் - குறள் 915


பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.

மு.வரதராசனார் உரை:
இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.

சாலமன் பாப்பையா உரை:
இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.

பரிமேலழகர் உரை:
மதி நலத்தின் மாண்ட அறிவினர் - இயற்கையாகிய மதிநன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; பொது நலத்தார் புல்நலம் தோயார் - பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார். (மதி நன்மை - முற்பிறப்புக்களில் செய்த நல்வின


மணக்குடவர் உரை:
மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார், எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார். இது புத்திமான் சேரானென்றது.


Translation:
From contact with their worthless charms, whose charms to all are free,
The men with sense of good and lofty wisdom blest will flee.

Explanation:
Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்