திருக்குறள் - குறள் 810
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: பழைமை.

திருக்குறள் - குறள் 810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.
மு.வரதராசனார் உரை:
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.
சாலமன் பாப்பையா உரை:
பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.
பரிமேலழகர் உரை:
பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைய நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்; விழையார் விழையப்படுப - பகைவரானும் விரும்பப்படுவர். (தம் பண்பாவது, செய்யாத முன் போல அன்புடையராதல். மூன்றன் உருபும் சிறப்பு உம்மையும் விகாரத்தால் தொக்
மணக்குடவர் உரை:
பழைய நட்டோர்மாட்டுக் குணத்தினின்று நீங்காதார், விரும்பாதாராலும் விரும்பப்படுவர். இது பகைவரும் விரும்புவாரென்றது.
Translation:
Ill-wishers even wish them well, who guard.
For ancient friends, their wonted kind regard.
Explanation:
Even enemies will love those who have never changed in their affection to their long-standing friends.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்