திருக்குறள் - குறள் 669
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைத்திட்பம்.
திருக்குறள் - குறள் 669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.
மு.வரதராசனார் உரை:
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.
பரிமேலழகர் உரை:
துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க. (துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய
மணக்குடவர் உரை:
முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க, பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை.
Translation:
Though toil and trouble face thee, firm resolve hold fast,
And do the deeds that pleasure yield at last.
Explanation:
Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்