திருக்குறள் - குறள் 652
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைத்தூய்மை.
திருக்குறள் - குறள் 652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.
மு.வரதராசனார் உரை:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.
பரிமேலழகர் உரை:
புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் லேண்டும் - அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும். (பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார்.
மணக்குடவர் உரை:
எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை பயவாத வினையை. என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
புகழியினையும் அறத்தினையும் பயனாகத் தராத தொழில்களை எக்காலத்திலும் ஒழித்து நீக்குதல் வேண்டும்.
Translation:
From action evermore thyself restrain
Of glory and of good that yields no gain.
Explanation:
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்