திருக்குறள் - குறள் 650
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: சொல்வன்மை.

திருக்குறள் - குறள் 650
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
மு.வரதராசனார் உரை:
தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை:
தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.
பரிமேலழகர் உரை:
கற்றது உணர விரித்து உரையாதார் - கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவையொப்பர். (செவ்வி பெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாத பூச் சூடப்படாதவாறு போல, நூலைக் க
மணக்குடவர் உரை:
இணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர், கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார். இது சுருங்கச் சொல்லுதலே யன்றி வேண்டுமிடத்து விரித்துஞ்சொல்லல் வேண்டு மென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தாம் கற்று வைத்துள்ள நூல்களைப் பிறர் அறியும் வண்ணம் விரித்துரைக்க முடியாதவர்கள், கொத்தாக மலர்ந்திருந்தும் மனமில்லாத மலரினை ஒப்பர்.
Translation:
Like scentless flower in blooming garland bound
Are men who can't their lore acquired to other's ears expound.
Explanation:
Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்