திருக்குறள் - குறள் 613
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: ஆள்வினையுடைமை.

திருக்குறள் - குறள் 613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.
மு.வரதராசனார் உரை:
பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.
பரிமேலழகர் உரை:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று - முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு. (பொருள் கைகூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக
மணக்குடவர் உரை:
முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம். இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எல்லோருக்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு, முயற்சி என்று சொல்லப்பட்ட உயர்ந்த குணத்தினிடத்தில் நிலை பெற்றிருப்பதாகும்.
Translation:
In strenuous effort doth reside
The power of helping others: noble pride!.
Explanation:
The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்