திருக்குறள் - குறள் 58

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்.


திருக்குறள் - குறள் 58


பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

மு.வரதராசனார் உரை:
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

சாலமன் பாப்பையா உரை:
பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

பரிமேலழகர் உரை:
பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் பு


மணக்குடவர் உரை:
பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பெண்டிர் தம்மைக் கொண்ட கணவனை வழிபட்டு வணங்கி வாழ்வாரானால், புத்தேளிர் வாழ்கின்ற உலகத்தில் அவரால் பெருஞ் சிறப்பினைப் பெறுவார்கள்.

Translation:
If wife be wholly true to him who gained her as his bride
Great glory gains she in the world where gods bliss abide.

Explanation:
If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்