Skip to content

Popular

திருக்குறள் - குறள் 456

குறள் பால்:
பொருட்பால்
குறள் இயல்:
அரசியல்
குறள் 456
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.
— திருவள்ளுவர் · சிற்றினஞ்சேராமை
WhatsApp

திருக்குறள் - குறள் 456 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.

மு.வரதராசனார் உரை

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

பரிமேலழகர் உரை

மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை.
(காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.) .

மணக்குடவர் உரை

மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை.இது மேலதற்குப் பயன் கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

மனம் தூய்மையானவர்களுக்கு எஞ்சி நிற்பதாகிய எச்சம் சிறப்பானதாக அமையும். இனம் தூய்மையானவர்களுக்கு நன்றாகாத செயல் எதுவுமே இல்லை.

Translation

From true pure-minded men a virtuous race proceeds;
To men of pure companionship belong no evil deeds.

Explanation

To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.

திருக்குறள் - குறள் 456
திருக்குறள் ஓவியம் - குறள் 456
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 46: சிற்றினஞ்சேராமை