Skip to content

Popular

திருக்குறள் - குறள் 262

குறள் பால்:
அறத்துப்பால்
குறள் இயல்:
துறவறவியல்
அதிகாரம்:
தவம்
குறள் 262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
— திருவள்ளுவர் · தவம்
WhatsApp

திருக்குறள் - குறள் 262 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.

மு.வரதராசனார் உரை

தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.

சாலமன் பாப்பையா உரை

முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.

பரிமேலழகர் உரை

தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம். (பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம்

மணக்குடவர் உரை

தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை. இது தவமிலார்க்குத் தவம் வாராது வரினுந் தப்புமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

தவத்தினை மேற்கொள்ளுவதென்பதும் முற்பிறவித தவத் தன்மையுடையவர்களுக்கேயாகும். அத்தவப் பிறவி இல்லாதவர்கள் தவம் செய்ய முயல்வது பயனற்ற முயற்சியேயாகும்.

Translation

To 'penitents' sincere avails their 'penitence';
Where that is not, 'tis but a vain pretense.

Explanation

Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practiced them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practice them (now).

திருக்குறள் - குறள் 262
திருக்குறள் ஓவியம் - குறள் 262
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 27: தவம்