Skip to content

Popular

திருக்குறள் - குறள் 178

குறள் பால்:
அறத்துப்பால்
குறள் இயல்:
இல்லறவியல்
அதிகாரம்:
வெஃகாமை
குறள் 178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
— திருவள்ளுவர் · வெஃகாமை
WhatsApp

திருக்குறள் - குறள் 178 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.

மு.வரதராசனார் உரை

ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

சாலமன் பாப்பையா உரை

செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.

பரிமேலழகர் உரை

செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் - சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம். ('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதா

மணக்குடவர் உரை

செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை, இது செல்வ மழியாதென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

செல்வமானது குறைந்து போகாமல் இருப்பதற்குக் காரணம் யாதென்று ஆராய்ந்தால், அது மற்றவனுக்கு உரிமையான பொருளினைத் தான் விரும்பாதிருத்தல் வேண்டும் என்பதாகும்.

Translation

What saves prosperity from swift decline?
Absence of lust to make another's cherished riches thine!.

Explanation

If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness.

திருக்குறள் - குறள் 178
திருக்குறள் ஓவியம் - குறள் 178
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 18: வெஃகாமை