திருக்குறள் - குறள் 1318

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: புலவி நுணுக்கம்.


திருக்குறள் - குறள் 1318


தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ஓ உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ? எனக் கேட்டு அழுதாள்.

மு.வரதராசனார் உரை:
அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியவழி, யார் உள்ளித் தும்மினீர்? என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன், அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப்


மணக்குடவர் உரை:
தும்மல் தோற்ற அதனை யடக்கினேன். அதற்காக நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள். இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எனக்குத் தும்மல் வந்தபோது அதனை யான் அடக்கினேன். அவள், 'உன்னுடைய காதலியர் உம்மை நினைப்பதை யான் அறியாதபடி மறைக்கின்றீரோ' என்று சொல்லிப் புலந்து அழுதாள்.

Translation:
And so next time I checked my sneeze; She forthwith wept and cried,
(That woman difficult to please), 'Your thoughts from me you hide'.

Explanation:
When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you".

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்