திருக்குறள் - குறள் 1312

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: புலவி நுணுக்கம்.


திருக்குறள் - குறள் 1312


ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை நீடுவாழ்க என வாழ்த்துவேன் என்று நினைத்து.

மு.வரதராசனார் உரை:
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

சாலமன் பாப்பையா உரை:
நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்).

பரிமேலழகர் உரை:
(தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக்


மணக்குடவர் உரை:
தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக: அவ்விடத்து யாம் தம்மை நெடிதுவாழுவீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து தும்மினார். இது தலைமகள் தோழிக்குக் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
யாம் காதலரோடு ஊடுதல் செய்து உரையாடிக் கொண்டிருந்தபோது அது நீக்கித் தம்மை நீடுவாழ்கவென்று கூறுவோம் எனக் கார்த்திக் காதலர் தும்மினார்.

Translation:
One day we silent sulked; he sneezed: The reason well I knew;
He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'.

Explanation:
When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்