திருக்குறள் - குறள் 1296

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: நெஞ்சொடுபுலத்தல்.


திருக்குறள் - குறள் 1296


தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

மு.வரதராசனார் உரை:
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

சாலமன் பாப்பையா உரை:
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே. ('என்மாட்டிருந்தது அன்ற


மணக்குடவர் உரை:
என்னெஞ்சு, யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் உடம்படாது என்னை நலிவதாக இருந்தது. இது தலைமகள். நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எனது மனமானது இங்கே இருந்துகொண்டு காதலரைப் பிரிந்து அவரது கொடுமைகளைத் தன்னுடன் சேர்ந்து நினைக்கும்போது என்னைத் தின்பது போன்ற துன்பத்தைச் செய்வதாகின்றது.

Translation:
My heart consumes me when I ponder lone,
And all my lover's cruelty bemoan.

Explanation:
My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்