திருக்குறள் - குறள் 1294

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: நெஞ்சொடுபுலத்தல்.


திருக்குறள் - குறள் 1294


இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.

மு.வரதராசனார் உரை:
நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?.

சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; துனி செய்து மற்றுத் துவ்வாய் - நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் நுகரக் கருதுவதல்லது அவர் தவறு நோக்கி, முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்; இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் - ஆகலான், இனி அப்பெற்றிப்பட்டவற்றை


மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ புலவியை நீளச்செய்து பின்னை நுகரமாட்டாய்: ஆதலான் இனி அப்பெற்றிப்பட்ட எண்ணத்தை நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நெஞ்சமே! நீ அவரைக் கண்டபோது இன்பம் நுகரக் கருதுவதல்லது அவரைக் கண்டதும் புலவியை உண்டாக்கிப் பின்நுகரக் கருதாய்; அப்படிப்பட்ட உன்னுடன் இனி எண்ணுவார் யார்? யான் அது செய்யேன்.

Translation:
'See, thou first show offended pride, and then submit,' I bade;
Henceforth such council who will share with thee my heart?.

Explanation:
O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்