திருக்குறள் - குறள் 1256
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: நிறையழிதல்.
திருக்குறள் - குறள் 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.
மு.வரதராசனார் உரை:
வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்தோ!.
சாலமன் பாப்பையா உரை:
என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டுதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று. (செற்றவர் என்றது ஈண்டும், அப்பொருட்டு. 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றத
மணக்குடவர் உரை:
செறுத்தார்பின்னே யான் சேறலை வேண்டுதலால் என்னை யடைந்த துயர் எத்தன்மைத்து; நன்றாக இருக்கின்றது. இது தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலைமகளை நோக்கி இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
என்னைவிட்டுப் பிரிந்தவர் பின்னே யான் செல்லுவதை விரும்புவதால், எனக்கு உற்ற துயர் எத்தன்மையானது?. மிகவும் நல்லதேயாகும்.
Translation:
My grief how full of grace, I pray you see!
It seeks to follow him that hateth me.
Explanation:
The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்