Skip to content

Popular

திருக்குறள் - குறள் 1254

குறள் பால்:
காமத்துப்பால்
குறள் இயல்:
கற்பியல்
அதிகாரம்:
நிறையழிதல்
குறள் 1254
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.
— திருவள்ளுவர் · நிறையழிதல்
WhatsApp

திருக்குறள் - குறள் 1254 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.

மு.வரதராசனார் உரை

யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

சாலமன் பாப்பையா உரை

இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது. (மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன, மன்று படுதல்

மணக்குடவர் உரை

யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது. இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

யான் முன்பெல்லாம் என்னை நிறையுடையேன் என்று நினைத்திருந்தேன். இன்று என் காமம் மறைத்து வைத்திருந்தையும் கடந்து மன்றத்தில் பலரும் அறிய வெளிப்படுகின்றது.

Translation

In womanly reserve I deemed myself beyond assail;
But love will come abroad, and casts away the veil.

Explanation

I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.

திருக்குறள் - குறள் 1254
திருக்குறள் ஓவியம் - குறள் 1254
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 126: நிறையழிதல்