Skip to content

Popular

திருக்குறள் - குறள் 1249

குறள் பால்:
காமத்துப்பால்
குறள் இயல்:
கற்பியல்
குறள் 1249
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
— திருவள்ளுவர் · நெஞ்சொடுகிளத்தல்
WhatsApp

திருக்குறள் - குறள் 1249 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?.

மு.வரதராசனார் உரை

என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.

சாலமன் பாப்பையா உரை

என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? ('உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்ற

மணக்குடவர் உரை

என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய். இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

என் நெஞ்சமே! காதலர் உள்ளத்திலேயே இருக்கின்றார். இப்போது வெளியில் போய்த் தேடி யாரிடம் செல்கின்றாய்?.

Translation

My heart! my lover lives within my mind;
Roaming, whom dost thou think to find?.

Explanation

O my soul! to whom would you repair, while the dear one is within yourself?.

திருக்குறள் - குறள் 1249
திருக்குறள் ஓவியம் - குறள் 1249
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 125: நெஞ்சொடுகிளத்தல்