திருக்குறள் - குறள் 1242

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: நெஞ்சொடுகிளத்தல்.


திருக்குறள் - குறள் 1242


காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.

மு.வரதராசனார் உரை:
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.

சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

பரிமேலழகர் உரை:
(தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) என் நெஞ்சு வாழி - என் நெஞ்சே, வாழ்வாயாக; அவர் காதல் இலராக நீ நோவது - அவர் நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமை - நின் பேதைமையே, பிறிதில்லை. ('நம்மை நினையாமையின், நங்கண் காத


மணக்குடவர் உரை:
அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது பேதைமை. இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
என்னுடைய நெஞ்சமே! நம்முடைய கணவர் நம்மிடத்தில் காதல் கொள்ளாமல் இருக்கின்றார். நீ அவர் வரவு நோக்கி வருந்துகின்றாய்; இது உன்னுடைய போதைமையேயாகும்.

Translation:
Since he loves not, thy smart
Is folly, fare thee well my heart!.

Explanation:
May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்