திருக்குறள் - குறள் 1196

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: தனிப்படர்மிகுதி.


திருக்குறள் - குறள் 1196


ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.

மு.வரதராசனார் உரை:
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது. (மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுப


மணக்குடவர் உரை:
ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது: காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது. இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும் தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலர் இருவரிடமும் இருக்க வேண்டிய காம வேட்கை ஒருவரிடம் மட்டும் உண்டானால் அது துன்பமானதாகும். காவடித் தண்டின் பாரம் போல இரு பக்கமும் ஓத்திருந்தால் அது இனிமையானதாகும்.

Translation:
Love on one side is bad; like balanced load
By porter borne, love on both sides is good.

Explanation:
Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்