திருக்குறள் - குறள் 1191
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: தனிப்படர்மிகுதி.

திருக்குறள் - குறள் 1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.
மு.வரதராசனார் உரை:
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.
பரிமேலழகர் உரை:
[அது , தனியாகிய படர் மிகுதி என விரியும் .அஃதாவது , படர் மிகுதி தலைவன்கண் இன்றித் தன்கண்ணதேயாதல் கூறுதல் .அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலின் , அவன்கண் இல்லையாயிற்று . இது , பசப்புற்று வருந்தியாட்கு உரியதாகலின் , பசப்புறு பருவரலின் பின் வைக்கப்பட்டது.]('காத
மணக்குடவர் உரை:
தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காம நுகர்ச்சியின்கண் பரலில்லாததோர் பழத்தைப் பெற்றவராவர். இது தடையின்றி நுகரலாமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தம்மால் விரும்பிக் காதலிக்கப்பட்ட தலைவரால் விரும்பப்பட்ட தலைவியர் காம அனுபவம் எனப்படும் வித்தில்லாத கனியினைப் பெற்றவராவர்.
Translation:
The bliss to be beloved by those they love who gains,
Of love the stoneless, luscious fruit obtains.
Explanation:
The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ? .

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்