திருக்குறள் - குறள் 106
- குறள் பால்:
- அறத்துப்பால்
- குறள் இயல்:
- இல்லறவியல்
- அதிகாரம்:
- செய்ந்நன்றி அறிதல்
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
திருக்குறள் - குறள் 106 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
மு.வரதராசனார் உரை
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.
சாலமன் பாப்பையா உரை
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
பரிமேலழகர் உரை
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும
மணக்குடவர் உரை
தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை
துன்பம் வந்த காலத்தில் துணையாக இருந்தவர் நட்பினை விடாதிருத்தல் வேண்டும். மனத்தில் குற்றமில்லாதவர்களின் உறவுபோன்ற நட்பினை மறவாதிருத்தல் வேண்டும்.
Translation
Kindness of men of stainless soul remember evermore!
Forsake thou never friends who were thy stay in sorrow sore!.
Explanation
Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 11: செய்ந்நன்றி அறிதல்
குறள் 101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
குறள் 102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
குறள் 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.
குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.
குறள் 105 உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.
குறள் 107 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு.
குறள் 108 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
குறள் 109 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
குறள் 110 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.