இலங்கை மாணவி அவுஸ்திரேலியாவில் புதிய கண்டுபிடிப்பு

இலங்கை மாணவி அவுஸ்திரேலியாவில் புதிய கண்டுபிடிப்பு

அவுஸ்திரேலியாவில் உள்ள பிரபல பலக்லைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்வி பயின்றுவரும் இலங்கையை சேர்ந்த மாணவி ஒருவர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் இலங்கை மாணவி பிரபானி ரணவீர என்பவரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் துப்பாக்கி குண்டு துளைக்காத மூன்று உலோகத்தால் ஆன கவச உடையைக் கண்டுபிடித்துள்ளார்.

தனது முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்ய மேற்கொண்ட ஆராய்ச்சியின்போதே இந்த புதிய கண்டுபிடிப்பை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இது தொடர்பில் அந்த மாணவி கூறியதாவது,

தம்மால் தயாரிக்கப்பட்ட உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட துப்பாக்கி குண்டு துளைக்காத உடை, போர்க்களத்தில் ஏற்படும் உயிரிழப்பிலிருந்து பாதுகாக்கிறது என்பதை தனது ஆராய்ச்சியில் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக மாணவி பிரபானி ரணவீர தெரிவித்துள்ளார்.

இந்த உடையானது உருக்கு தவிர, டைட்டானியம் மற்றும் அலுமினியம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். போர்க்களத்தில் ஏற்படும் தாக்குதலுக்கு பின்னல் ஏற்படக்கூடிய மனஉளைச்சலை இந்த உடையானது 80 சதவீதம் குறைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.