கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளின் வளர்சிக்கு உதவும் பழக்கள்.

கர்ப்பக் காலத்தில் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு உதவும் பழக்கள்.

கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளின் வளர்சிக்கு உதவும் பழக்கள்.

கர்ப்பக் காலத்தில் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் அடங்கிய உணவை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது குழந்தை பிறப்பில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் குறையக்கூடும்.

வைட்டமின் – C, வைட்டமின் – D, இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, புரதச்சத்துக்கள், துத்தநாகம், ஐயோடின், வைட்டமின் – பி இந்த சத்துக்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

மாதுளம்பழத்தில் கர்ப்பிணிகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்திருக்கும். கர்ப்பிணிகள் தொடர்ந்து மாதுளை சாப்பிட்டால், தாய்க்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் தேவையான அளவு சத்து கிடைக்கும்.

கர்ப்பிணிகள், நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணிப் பழங்களை சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, மற்றும் சி ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.

திராட்சையில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம் போன்றவை அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகள் தாராளமாக இதை சாப்பிடலாம்.

வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபாடு, ரத்தசோகை ஆகியவற்றுக்கு இது அருமருந்து.

ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட் உள்ளது. குழந்தைப் பிறக்கும் போது உண்டாகும் பிரச்சனையைத் தடுக்கும். தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சுப் பழச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

கர்ப்பிணிகள் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது, குழந்தை ஆரோக்கியமான உடல்நலம் பெற உதவும்.

பேரிக்காயயில் நார்ச்சத்து இருப்பதால் அதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நன்மை கிடைக்கும். மேலும் தேவையற்றக் கழிவுகளை அகற்றும். கர்ப்பிணிகள் மட்டுமல்லாமல் பால் கொடுக்கும் தாய்மாருக்கும் பேரிக்காய் ஏற்றது.