நடராஜப் பத்து - Nataraja Pathu - JukeBox || Sivan Songs || Sivapuranam D V Ramnani || Vijay Musicals

நடராஜப் பத்து - Nataraja Pathu - JukeBox || Sivan Songs || Sivapuranam D V Ramnani || Vijay Musicals

Mar 4, 2017 - 08:00
Jan 29, 2021 - 08:00
 0  16
நடராஜர் பத்து - Nataraja Pathu - JukeBox || Music & Singer : Sivapuranam D V Ramani || Composer : Sirumanavoor Munuswamy || Vijay Musicals Nataraja Pathu | நடராஜப் பத்து | Education Purpose Nataraja pathu is a request of people to lord shiva to Give them what they need. Hear to this song and get benefited dear viewers. Aaruthra Tharisanam, Aarudra Darisanam, Margazhi Thiruvathirai #paramporulesivasiva#natarajarsongs SONGS : Mannaathi Boothamodu Maanada Mazhuvaada Kadalendra Puvimeedhil Vambu Sooniyamalla Nondhu Vandhen Endru Vazhi Kandu Unnadiyai Annai Thandhai Kaamun Marameethu Thaayaar Irundhenna Innamum sollavo Sani Raghu Kedhu Pudhan சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள் படுவது சிதம்பரம் ஆகும். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது. சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம். சிதம்பரத்தின் மூர்த்தியாக விளங்குபவர் ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியையும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர். நடராஜ பத்து - சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலாமக விளங்கியது. மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே"என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது. ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். தில்லையில் விளங்கும் ஸ்ரீ நடராஜரின் மேல் அளவிற்கடந்த பக்தியினால் "நடராஜ பத்து" பாடல்களை சிறுமணவூர் முனுசாமி எழுதியுள்ளார். இதனை ஒவ்வொரு திருவாதிரை திருநாளிலும் சிவத்தலத்திலுள்ள நடராஜர் சந்நிதியில் பாடி பாராயணம் செய்து வர நடராஜர் அருளால் 16 பேறுகளும் பெற்று முக்தியடைவர். இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow