மாடித்தோட்டத்தில் கொத்தவரங்காய் பயிரிடும் முறை

மாடித்தோட்டத்தில் கொத்தவரங்காய் பயிரிடும் முறை

மாடித்தோட்டத்தில் கொத்தவரங்காய் பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித் தோட்டம் கொத்தவரங்காய் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
 

  • Grow Bags அல்லது Thotti.
  • அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், சுடோமோனஸ், உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  • விதைகள்
  • நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

கொத்தவரங்காய் செடி வளர்க்க பைகள் அல்லது தொட்டிகளை பயன்படுத்தலாம். இதற்கு அளவு, வடிவம் என்று எதுவும் தேவைப்படாது. அதனால் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண் கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்களில் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும்.

விதைத்தல்

விதைகளை முற்றிய காய்களில் இருந்து எடுத்தோ அல்லது கடைகளில் வாங்கி வந்தோ விதிக்கலாம். விதைக்கும் விதையானது ஆரோக்கியாமனதாக இருக்க வேண்டும்.விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழத்தில் விதைகளை விதைத்து பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும்.

நீர் நிர்வாகம்

விதை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

உரங்கள்

வேப்ப இலைகளை சேமித்து நன்கு காய வைத்துத் தூல் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும். பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும், செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.

பாதுகாப்பு முறைகள்

வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.

அறுவடை

காய்களை முற்றி விடாமல் இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

கொத்தவரங்காய் பயன்கள்:

  • கொத்தவரையில் இருக்கும் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் போலேட் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க வல்லவை.
  • கர்ப்பிணிகளுக்கு தேவையான இரும்புச்சத்தும், சுண்ணாம்புத் சத்தும் கொத்தவரையில் மிகுதியாக உள்ளன.
  • கொத்தவரையில் கிளைகோ நியூட்ரியன்ட் என்னும் மருத்துவ வேதிப்பொருள் மிகுதியாக உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
  • அதிக அளவிலான போலிக் அமிலத்தையும் கொத்தவரை கொண்டுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.
  • கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது.