கோளறு பதிகம் KOLARU PATHIGAM THEVARAM

கோளறு பதிகம் KOLARU PATHIGAM THEVARAM

Dec 25, 2012 - 08:00
Jan 29, 2021 - 08:00
 0  15
A Great song which protects devotees and gives everything. This set of eleven songs when chanted daily protects from all kinds of things harmful in nature and everything will only turn out to be only good,good and only good.Chanting is enough..even singing is not required..கோளறு பதிகம் வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே." "என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. " "உருவளர் பவளமேனி ஒளிநீ ற*ணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருக*லர் கொன்றைதிங்கள் முடிமேல*ணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. " "மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்களான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே." "நஞ்ச*ணி கண்டனெந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே." "வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய் நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடு நாகமோடு கரடி ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே." "செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாத மிகையான* பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே." "வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய் வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த வதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற*னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே." "பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே." "கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார*வர்க்கு மிகவே." "தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே."

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow