அக்டோபர் 29
வரலாற்று நிகழ்வுகள்
பெரும் இன அழிப்பு: லித்துவேனியாவில் செருமனியப் படையினரால் 10,000 வரையான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
Events
1941
அக்டோபர் 29
1941
அக்டோபர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1938 பெரும் இன அழிப்பு: செருமனியின் ஆம்பர்கு நகரில் நியூவென்காம் வதை முகாம் திறக்கப்பட்டது. திசம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 பெரும் இன அழிப்பு: கியூபாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 963 யூத அகதிகளை ஏற்றிச் சென்ற செயின்ட் லூயிசு என்ற கப்பல் ஐக்கிய அமெரிக்காவினால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு, ஐரோப்பா திரும்பியது. இந்த அகதிகளில் 200 பேர் வரை பின்னர் செருமனியின் நாட்சி வதைமுகாம்களில் சிறைவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். சூன் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1940 பெரும் இன அழிப்பு: முதல் தொகுதி சிறைக்கைதிகள் அவுஷ்விட்ஸ் வதை முகாமை வந்தடைந்தனர். மே 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 பெரும் இன அழிப்பு: அவுசுவிட்சு வதைமுகாமின் பாதுகாப்பு அதிகாரி கார்ல் பிரீட்சு சோவியத் போர்க்கைதிகள் மீது சைக்லோன் பி என்ற நச்சு வாயுவைப் பரிசோதித்தான். செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர். திசம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 பெரும் இன அழிப்பு: உக்ரேனின் கார்கீவ் நகரில் 15,000 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர். திசம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1942 பெரும் இன அழிப்பு: மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாட்சி செருமனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1942 பெரும் இன அழிப்பு: உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர். பெலருசில் இருந்த நாட்சி வதைமுகாம் அழிக்கப்பட்டு, அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். மே 9 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 29 அன்று மேலும்
- கிமு 539 பாரசீகப் பேரரசை நிறுவிய சைரசு பாபிலோனின் தலைநகரை அடைந்து, யூதர்கள் அனைவரையும் அவர்களது நாட்டுக்குத் திரும்ப அனுமதித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 312 முதலாம் கான்ஸ்டன்டைன் மில்வியன் சமரில் பெரும் வெற்றி பெற்று உரோம் திரும்பினான். அங்கு அவனுக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 969 பைசாந்தியப் படையினர் சிரியாவின் அந்தியோக்கியா நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1270 நாம்தேவ், மகாராட்டிரத் துறவி (இ. 1350) பிறப்புகள்
- 1390 மந்திரவாதிகளுக்கு எதிரான முதலாவது வழக்கு பாரிசில் இடம்பெற்றது. வழக்கின் இறுதியில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1591 ஒன்பதாம் இனொசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1618 ஆங்கிலேயக் கவிஞரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னருக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1618 வால்ட்டர் ரேலி, ஆங்கிலேய இராணுவ அதிகாரி, நாடுகாண் பயணி, அரசியல்வாதி (பி. 1554) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெரும் இன அழிப்பு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.