ஆயிரத்தில் ஒருவன் ஸ்டைலில் குமரிக்கண்டத்தின் பின்னணியில் ரெடியாகி உள்ள சதுர் பட ட்ரைலர்

அமர், ஹரிஜா, அஜித், செல்லா, ஜீவா, கிருஷ் பாலா, கிருஷ் ஜெகன், ராஜன், தாமோதரன், ஸ்டீபன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சதுர் படத்தை அகஸ்டின் பிரபு இயக்கியுள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் ரெடியாகி உள்ள இப்படம் குமரிக்கண்டத்தின் பின்னணியில் அறிவியல் கலந்த கற்பனையாக தயாராகியுள்ளது.

அமர், ஹரிஜா, அஜித், செல்லா, ஜீவா, கிருஷ் பாலா, கிருஷ் ஜெகன், ராஜன், தாமோதரன், ஸ்டீபன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை ஆதர்ஷ் சந்திரசேகரன். எடிட்டிங் கார்த்திக் செல்வம். ஒளிப்பதிவு ராம் சந்தர். படத்தை உடுமலையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் இயக்குனரே செரில் ஸ்டூடியோஸ் வாயிலாக இணைந்து தயாரித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக தமிழகம், கேரளாவின் முக்கிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறதாம். படத்தில் அனைத்து முக்கிய பொறுப்புகளையும், கோவையை சேர்ந்தவர்களே, அதுவும் புதுமுகங்களே ஏற்று செய்துள்ளது கூடுதல் ஸ்பெஷல் விஷயமாம்.

அனைத்து தரப்பினரையும் கவரக்கூடியதாக இப்படம் இருக்கும் என சொல்கிறார் இயக்குனர். குமரிக்கண்டத்தின் அழிவை தேடி அறியும் முயற்சி தொடர்பான, இந்த படத்தின் ட்ரைலர் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் சாயலில் உள்ளதாக சொல்லி வருகின்றனர்.