மாடித்தோட்டத்தில் முள்ளங்கி பயிரிடும் முறை

May 5, 2022 - 00:00
 0  53
மாடித்தோட்டத்தில் முள்ளங்கி பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் முள்ளங்கி பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • Grow Bags அல்லது Thotti
  • அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
  • விதைகள்
  • பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

இதற்கு தொட்டி அல்லது பைகளை எந்த வடிவமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

கிழங்கு வகை என்பதால் தென்னை நார்க்கழிவு சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் கிழங்கு வளர ரொம்ப எளிதாக இருக்கும். மண் இறுகிப்போகும் பிரச்னை இருக்காது.

விதைத்தல்

முள்ளங்கியை நேரடியாகவே நடவு செய்யலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

உரங்கள்

காய்கறி கழிவுகள், டீத்தூள், முட்டை ஓடு ஆகியவற்றை மக்கச்செய்து உரமாக போடலாம்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

அறுவடை

முள்ளங்கி முளைத்து இரண்டு மாதத்திலேயே அறுவடைக்கு வந்துவிடும். இதன் கிழங்குகள் சற்று மேலேயே தெரிவதால் சரியான பருவம் பார்த்து அறுவடை செய்ய வேண்டும்.

முள்ளங்கி பயன்கள்:
  • முள்ளங்கியில் பைபர், ரிபோபிளேவின், பொட்டாசியம், காப்பர், விட்டமின் பி6, மக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
  • முள்ளங்கியில் நார்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் விளைவுகளை எளிதில் தீர்க்கிறது. மேலும் இது தளர்வான குடலை உறுதிபடுத்துவதற்கு உதவுகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியவற்றிற்கு உதவுகிறது.
  • குழந்தைகளுக்கு, சிறு வயதிலிருந்தே முள்ளங்கியை உணவில் சேர்த்து வந்தால் ஞாபக சக்தி பெருகும், மூளை சிறந்த வளர்ச்சி அடையும். முள்ளங்கி சாப்பிட்டால் கலோரி எண்ணிக்கையை நிறைவு செய்து எளிதில் பசியை நிறைவு செய்கிறது.
  • முள்ளங்கியில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால் இது எடையை இழக்கச் செய்கிறது.
  • முள்ளங்கி இருதய நோய்களை குணமாக்க உதவுகின்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow