மாடித்தோட்டத்தில் புளிச்சக்கீரை பயிரிடும் முறை

Jun 23, 2023 - 00:00
 0  56
மாடித்தோட்டத்தில் புளிச்சக்கீரை பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் புளிச்சக்கீரை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • 1. Grow Bags அல்லது Thotti
  • 2. அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
  • 3. விதைகள்
  • 4. பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

தேர்வு செய்த தொட்டி அல்லது பைகளில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். இது பலமுறை அறுவடை செய்வதால் தென்னை நார்க்கழிவு சேர்ப்பதன் மூலம் மண் இறுகாமல் இலகுவாக இருக்கும். பைகளாக இருந்தால் அதன் அடியில் இரு துளைகள் அமைக்க வேண்டும்.

பைகளில் உரங்களை நிரப்பும் போது, ஒரு அடி ஆழத்திற்கு மேல் நிரப்ப வேண்டும்.

விதைத்தல்

விதைகளை குறிப்பிட்ட இடைவெளியில் ஊன்ற வேண்டும். ஊன்றிய பின் செய்திதாள்களை கொண்டு மூட வேண்டும். வெய்யில் அதிகமாக இருந்தால் முளைக்கும் திறன் பாதிக்கப்படும். விதைகள் முளைத்தப்பின் செய்திதாள்களை நீக்கி விடலாம்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக போட்டிருப்பதால் ஈரப்பதத்தைக் கண்காணித்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில் அது அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும்.

உரங்கள்

சமையலறைக் கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம். மண்புழு உரத்தை அடியுரமாக இடுவதால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

ஜீவாமிர்தம் அல்லது பஞ்சகாவ்யா 10 மில்லியை, இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

கீரைகள் வாடுவதை தவிர்க்க கீரை வளர்க்கும் பகுதியைச் சுற்றிலும் வலை அமைக்கலாம். இல்லையெனில் நிழல் விழும் இடத்தில் மாற்றி வைக்கலாம். இதன் நுனி கிளைகளை கிள்ளி பக்கக்கிளைகள் வளர ஊக்குவிக்க வேண்டும்.

இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து வேர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாகவும், உரமாகவும் செயல்படும்.

அறுவடை

கீரைகளை இதன் வேர்ப்பகுதியில் இருந்து 5 செ.மீ விட்டு அறுவடை செய்ய வேண்டும்.

இதன் செடிகள் முற்றிய பிறகு இதில் இருந்து விதைகளை சேகரித்துக் கொள்ளலாம்.

பயன்கள்:
  • இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் நிறைந்த புளிச்சக்கீரையை சாப்பிடுவதால் இரத்தம் தூய்மை அடையும்.
  • உடல் வெப்பத்தை குறைத்து சமப்படுத்துவதில் புளிச்ச கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.
  • வாதநோய் உள்ளவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய் தணிந்துவிடும்.
  • மஞ்சள் காமாலைக்கு ஆளானவர்கள் கைப்பிடி அளவு புளிச்சகீரையை அரைத்து சாறு எடுத்து மோருடன் கலந்து பருகிவர மஞ்சள் காமாலை குணமடையும்.
  • சொறி, சிரங்கு உள்ளவர்கள் அதற்கான மேல்பூச்சு மருந்து போட்டு வரும் நேரங்களில் இந்த புளிச்சக்கீரையை சமைத்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவது குணம் பெறுதலை விரைவுபடுத்தும்.
  • புளிச்ச கீரையின் கனிகளின் சாறுடன் சர்க்கரை மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow