மாடித்தோட்டத்தில் திராட்சை பயிரிடும் முறை

 0  6
மாடித்தோட்டத்தில் திராட்சை பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் திராட்சை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • நடவு குழி தயாரித்தல்
  • அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்பந்தூள், பஞ்சகாவ்யா.
  • குச்சிகள்
  • பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்

நடவு குழி தயாரித்தல்

திராட்சையை மாடியில் தொட்டியில் வளர்க்க முடியாது. ஏனென்றால் இதன் வேர்கள் பெரிதானால் தொட்டி தாங்காமல் உடைந்து விடும். ஆனால் புதுமையான வழியில் மாடியில் திராட்சை தோட்டத்தை அமைக்கலாம்.

அதற்கு 1x1x1 மீட்டர் அளவுள்ள குழிகளை வீட்டை சுற்றி எடுக்க வேண்டும். அதாவது கீழிருந்து செடி வளர்த்து மாடியில் பந்தல் போட வேண்டும். அதற்கு தகுந்தவாறு குழிகளை எடுக்க வேண்டும்.

குழிகளில் மாட்டுச்சாண‌ம், மண்புழு உரம் ஆகியவற்றை மணலுடன் கலந்து நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 10 நாட்கள் கழித்து, கலவை நன்கு மக்கியதும் விதைப்பு மேற்கொள்ள வேண்டும்.

விதைத்தல்

நல்ல ஆரோக்கியமான, நோய் தாக்காத குச்சிகளை தேர்ந்தெடுத்து ஊன்ற வேண்டும். அத்துடன் சிறிய குச்சி ஒன்றை சேர்த்து நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் நீர் தெளிக்க வேண்டும். தினம் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

பந்தல் முறை

செடிகள் சற்று வளர்ந்ததும் அதன் கொடிகளை கயிற்றுடன் கட்டி மொட்டை மாடிக்கு கொண்டு வர வேண்டும்.

மொட்டை மாடியில் பந்தல் போடுவதற்கு சுற்றிலும் இரும்பு கம்பிகளை பயன்படுத்தலாம் அல்லது உறுதியான மூங்கில் கழிகளை பயன்படுத்தலாம். குறுக்கு, நெடுக்காக மரக்கட்டைகளை அமைத்துக் கொள்ளலாம்.

கீழ் இருந்து கொண்டு வந்த கொடி கயிறுகளை பந்தலில் இணைத்து விட வேண்டும்.

உரங்கள்

மண்புழு உரத்தை ஒவ்வொரு குழிக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இரண்டு கிலோ அளவிற்கு இட வேண்டும்.

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

பாதுகாப்பு முறைகள்

வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும்.

வருடத்திற்கு ஒரு முறை 10 கிலோ கடலைப்பிண்ணாக்கை தண்ணீரில் கரைத்து, செடிகளின் வேர்பகுதியில் ஊற்ற வேண்டும்.

அறுவடை

பழுத்த பழங்களை அறுவடை செய்ய வேண்டும். காகம், அணில் தொல்லையை சமாளிக்க கறுப்பு காகிதங்களை மாடியில் பறக்க விட வேண்டும்.

திராட்சை பயன்கள்:
  • திராட்சையில் உள்ள குளுக்கோஸ் உயர்ந்த தரம் கொண்டது. இது சக்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்பொழுது நல்ல சக்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
  • கர்பப்பை கோளாறு உள்ள பெண்கள் திராட்சை பலத்தை எடுத்துக்கொண்டால் கர்பப்பை சம்மந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும்.
  • இதயத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இதய ரத்த குலை அடைப்பு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
  • புற்றுநோய் செல்களை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது.
  • உடலில் உள்ள கெட்ட நீர்,வாயு,சளி,குடல் கழிவுகள்,உப்புகள் ஆகியவற்றை கரைத்து வெளியேற்றும் தன்மை உடையது.
  • உலர்ந்த திராட்சையும் பல நன்மைகளை கொண்டுள்ளது. ஆகவே எக்காலத்திலும் திராட்சையை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow