மாடித்தோட்டத்தில் செம்பருத்தி பயிரிடும் முறை

Dec 9, 2022 - 00:00
 0  44
மாடித்தோட்டத்தில் செம்பருத்தி பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித் தோட்டம் செம்பருத்தி பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்
  • அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  • செடிகள்
  • நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
  • கவாத்து உபகரணங்கள்

தொட்டிகள்

தேர்வு செய்த டிரம்மில் அடியுரமாக மண், தென்னை நார்க்கழிவு, இயற்கை உரம் என மூன்றையும் சம அளவில் கலந்து ஒரு வார காலத்திற்கு ஆற விட வேண்டும்.

செடிகள் வளர்ப்பதற்காக உரங்களை நிரப்பும் பொழுது, டிரம்மின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

இது நீண்ட காலச் செடி என்பதால் தென்னை நார்க்கழிவு சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் மண் இலகுவாக செடி வளர்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

விதைத்தல்

செடிகளை உரக்கலவையின் மையத்தில் நடவு செய்ய வேண்டும். வேர்ப்பகுதி முழுவதும் மறையும் படி ஊன்ற வேண்டும்.

நீர்

செடிகளை ஊன்றியவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினம் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

செடிக்கு தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்பொழுது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை.

உரங்கள்

வளர்ந்த ஒரு வயது செடிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரம் ஒரு பிடி போட வேண்டும்.

இரண்டு வயது செடிகளுக்கு இரண்டு மடங்கு உரம் போட வேண்டும்.

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.

பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து மாதம் ஒருமுறை அதன் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட்டு நீர் ஊற்ற வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இது அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

செடிகளின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். அப்பொழுது தான் பக்கக்கிளைகள் தோன்றி குத்துச்செடியாக காணப்படும்.

செடிகளின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். அப்பொழுது தான் பக்கக்கிளைகள் தோன்றி குத்துச்செடியாக காணப்படும்.

பயன்படுத்தும் இடங்கள்

தோட்டத்தில் வருடம் முழுவதும் பூக்களைத் தரக்கூடியது இந்த செம்பருத்தி.

செம்பருத்தி கண்ணைப் பறிக்கக்கூடிய வகையில் பல்வேறு நிறங்களில் உள்ளதால் அவற்றை நடவு செய்தால் தோட்டம் பார்பதற்கு அழகாக இருக்கும்.

செம்பருத்தி பயன்கள்
  • தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
  • செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
  • இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.
  • உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
  • செம்பருத்திப் பூவின் கஷாயமானது நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.
  • சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow