திருநீற்றுப் பச்சிலை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

Aug 2, 2022 - 00:00
 0  23
திருநீற்றுப் பச்சிலை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

திருநீற்றுப் பச்சிலை, தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட மூலிகையாகும்.

தற்போது பிரான்ஸ், இந்தோனேஷியா, மொராக்கோ, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் சில இடங்களில் வணிக ரீதியாகப் பயிர் செய்யப்படுகிறது.

திருநீற்றுப் பச்சிலை என்னும் மூலிகையானது, திருநீற்றுப்பத்திரி என்ற பெயராலும் அழைக்கப்படுகின்

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

ஐரோப்பிய வகை, ரீயூனியன் வகை, சின்னமேட் வகை மற்றும் யூஜினால் ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்

மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

மணல் தவிர்த்து நல்ல வடிகால் வசதியுடன் உள்ள மண் வகைகளில் நன்கு வளரும் தன்மை உடையது.

விதையளவு

ஒரு ஏக்கருக்கு விதைக்க 5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

நாற்றங்கால் தயாரித்தல்

நன்கு உழது சமன் செய்யப்பட்ட நிலத்தில் 10 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 10-15 செ.மீ உயரமுள்ள பாத்திகளை அமைக்க வேண்டும். விதைகளை வரிசையில் 2 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். விதைத்த பிறகு நன்கு சலித்த மணல் கொண்டு மேல்பரப்பை மூட வேண்டும். விதைகளை விதைக்கும் முன் மற்றும் விதைத்த பின் நீர் தெளிக்க வேண்டும். தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைகள் 10-15 நாட்களுக்குள் முளைத்து விடும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது ஏக்கருக்கு 20 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் தேவையான அளவில் பாத்திகளை அமைக்கவேண்டும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள நடவு வயலில் 20 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். வரிசைகளுக்கிடையே 75 செ.மீ இடைவெளியும், செடிகளுக்கிடையே 30 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

செடிகளின் சீரான வளர்ச்சிக்கு ஒரு ஏக்கருக்கு 50 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தை அடியுரமாக இட வேண்டும். மூன்றாவது மாதத்தில் 50 கிலோ தழைச்சத்து உரத்தை மேலுரமாக இட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிட வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகள் நட்ட 20 முதல் 25 நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் களை எடுக்க வேண்டும்.

நாற்றுகளின் நுனியை அதாவது முதல் பூவைக் கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் செடியின் பக்க வளர்ச்சி அதிகரிக்கும்.

பயிர் பாதுகாப்பு

இந்த மூலிகை செடியில் பொதுவாக பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுவது இல்லை.

அறுவடை

நடவு செய்த மூன்றாவது மாதத்தில் இருந்து இலைகளை அறுவடை செய்ய வேண்டும். ஒரு ஆண்டிற்கு மூன்று அல்லது நான்கு முறை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த இலைகளை நிழலில் உலர்த்தி பின்பு சேமித்து வைக்கவோ, எண்ணெய் எடுக்கவோ பயன்படுத்தலாம்.

மகசூல்

ஒரு ஏக்கருக்கு 13-14 டன் இலைகள் மகசூலாக கிடைக்கும்.

பயன்கள்
  • பீட்டா கரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் அடங்கி உள்ளன.
  • காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு இதன் இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.
  • இதன் இலையை கசக்கி அதன் சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும். புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும்.
  • நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாகும்.
  • இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்சனைகள் குணமாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow