திருக்குறள் - குறள் 994

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: பண்புடைமை.


திருக்குறள் - குறள் 994


நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.

மு.வரதராசனார் உரை:
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

சாலமன் பாப்பையா உரை:
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

பரிமேலழகர் உரை:
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு - நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை; உலகு பாராட்டும் - உலகத்தார் கொண்டாடா நிற்பர். ('புரிந்த' என்னும் பெயரெச்சம் ஈண்டுக் காரணப் பொருட்டு. நயனொடு நன்றி புரிதலும் பயன


மணக்குடவர் உரை:
நீதியையும் அறத்தையும் விரும்புதலாற் பிறர்க்குந் தமக்கும் பயன்படுதலுடையாரது பண்பினை உலகத்தார் கொண்டாடா நிற்பர்.


Translation:
Of men of fruitful life, who kindly benefits dispense,
The world unites to praise the 'noble excellence'.

Explanation:
The world applauds the character of those whose usefulness results from their equity and charity.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்