Skip to content

Popular

திருக்குறள் - குறள் 847

குறள் பால்:
பொருட்பால்
குறள் இயல்:
நட்பியல்
குறள் 847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
— திருவள்ளுவர் · புல்லறிவாண்மை
WhatsApp

திருக்குறள் - குறள் 847 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.

மு.வரதராசனார் உரை

அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

சாலமன் பாப்பையா உரை

அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.

பரிமேலழகர் உரை

அருமறை சோரும் அறிவிலான் - பெறுதற்கு அரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும் - அவ்வுறுதி அறியாமையால் தானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்து கொள்ளும். ('சோரும'¢ என இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்த

மணக்குடவர் உரை

அறிவில்லாதான் அரிதாக எண்ணின மறைப் பொருளைச் சோரவிடுவன்; அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளுவன். சோரவிடுதல்- பிறர்க்குச் சொல்லுதல். இது பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது.

Translation

From out his soul who lets the mystic teachings die,
Entails upon himself abiding misery.

Explanation

The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.

திருக்குறள் - குறள் 847
திருக்குறள் ஓவியம் - குறள் 847
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 85: புல்லறிவாண்மை