திருக்குறள் - குறள் 840
- குறள் பால்:
- பொருட்பால்
- குறள் இயல்:
- நட்பியல்
- அதிகாரம்:
- பேதைமை
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
திருக்குறள் - குறள் 840 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.
மு.வரதராசனார் உரை
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.
பரிமேலழகர் உரை
சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும். (கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வ
மணக்குடவர் உரை
கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும், சான்றோர் அவையின்கண் பேதை புகுந்து கூடியிருத்தல். இது பேதை யிருந்த அவை யிகழப்படுமென்றது.
Translation
Like him who seeks his couch with unwashed feet,
Is fool whose foot intrudes where wise men meet.
Explanation
The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 84: பேதைமை
குறள் 831 பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.
குறள் 832 பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்.
குறள் 833 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்.
குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்.
குறள் 835 ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு.
குறள் 836 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.
குறள் 837 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை.
குறள் 838 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின்.
குறள் 839 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்.