Skip to content

Popular

திருக்குறள் - குறள் 734

குறள் பால்:
பொருட்பால்
குறள் இயல்:
அரணியல்
அதிகாரம்:
நாடு
குறள் 734
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
— திருவள்ளுவர் · நாடு
WhatsApp

திருக்குறள் - குறள் 734 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

மு.வரதராசனார் உரை

மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை

மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

பரிமேலழகர் உரை

உறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சேராது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க க

மணக்குடவர் உரை

மிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும், சேராது இயல்வது நாடு. இது சேர்தலாகாதன கூறிற்று.

Translation

That is a 'land' whose peaceful annals know,
Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.

Explanation

kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.

திருக்குறள் - குறள் 734
திருக்குறள் ஓவியம் - குறள் 734
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 74: நாடு