திருக்குறள் - குறள் 607
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: மடியின்மை.
திருக்குறள் - குறள் 607
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.
மு.வரதராசனார் உரை:
சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.
சாலமன் பாப்பையா உரை:
சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.
பரிமேலழகர் உரை:
மடி புரிந்து மாண்ட உஞற்று இலவர் - மடியை விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்; இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் - தம் நட்டார்முன் கழறுதலை மிகச் செய்து அதனால் பயன் காணாமையின், பின் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்பர்.('இடி' என்னும் முதல்நிலைத் தொழிற் பெயரா
மணக்குடவர் உரை:
கழறுதலைச் செய்து பிறர் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லைக் கேட்பர், மடியைச் செய்து மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
சோம்பலினை விரும்பிச் சிறந்த முயற்சியினை மேற்கொள்ளாதவர்கள், நண்பர்களும் பிறரும் கண்டித்துப் பேசி இகழும் சொல்லினைக் கேட்பவராவார்.
Translation:
Who hug their sloth, nor noble works attempt,
Shall bear reproofs and words of just contempt.
Explanation:
Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்