Skip to content

Popular

திருக்குறள் - குறள் 135

குறள் பால்:
அறத்துப்பால்
குறள் இயல்:
இல்லறவியல்
அதிகாரம்:
ஒழுக்கமுடைமை
குறள் 135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
— திருவள்ளுவர் · ஒழுக்கமுடைமை
WhatsApp

திருக்குறள் - குறள் 135 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.

மு.வரதராசனார் உரை

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.

பரிமேலழகர் உரை

அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. (உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? கொடுப்பது அழுக்

மணக்குடவர் உரை

மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல ஒழுக்கமில்லாதான் மாட்டு மிகுதியில்லையாம். இஃது உயர்ச்சியில்லையா மென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

பொறாமை உள்ளவனிடத்தில் செல்வப் பெருக்கம் இல்லாததுபோல், ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்ச்சி என்பது இல்லாததாகிவிடும்.

Translation

The envious soul in life no rich increase of blessing gains,
So man of 'due decorum' void no dignity obtains.

Explanation

Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.

திருக்குறள் - குறள் 135
திருக்குறள் ஓவியம் - குறள் 135
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 14: ஒழுக்கமுடைமை