بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
-
إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ 1
1. (உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது, -
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ 2
2. நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது, -
وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ 3
3. மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும் போது, -
وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ 4
4. (இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது. -
وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ 5
5. காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது. -
وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ 6
6. கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்.) -
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ 7
7. அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும். -
وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ 8
8. அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும், -
بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ 9
9. ‘‘எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று. -
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ 10
10. அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும். -
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ 11
11. அப்போது வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும். -
وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ 12
12. அப்போது நரகம் எரிக்கப்படும். -
وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ 13
13. அப்போது சொர்க்கம் சமீபமாகக் கொண்டு வரப்படும். -
عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ 14
14. (அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்து கொண்டு வந்திருப்பதை நன்கறிந்து கொள்ளும். -
فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ 15
15. (மனிதர்களே!) சென்றவழியே மேலும் செல்லும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக! -
ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ 16
16. தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக! -
وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ 17
17. செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக! -
وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ 18
18. உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக! -
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ 19
19. நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும். -
ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ 20
20. அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு. -
مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ 21
21. (அவர் அவ்விடத்திலுள்ள வானவர்களின்) தலைவர்; மிக்க நம்பிக்கையுடையவர். -
وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ 22
22. (மக்காவாசிகளே! நம் தூதராகிய) உங்கள் தோழர் பைத்தியக்காரரல்ல. -
وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ 23
23. நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார். -
وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ 24
24. (அச்சமயம் அவர் கண்ட) மறைவானவற்றை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல. -
وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ 25
25. இன்னும், இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல. -
فَأَيۡنَ تَذۡهَبُونَ 26
26. ஆகவே, (இதைவிட்டு) நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள்? -
إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ 27
27. இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை. -
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ 28
28. உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்). -
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ 29
29. எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள்.
114 அத்தியாயங்கள் · All surahs ›
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.