செப்டம்பர் 5
வரலாற்று நிகழ்வுகள்
பனிப்போர்: சோவியத் தூதரக ஊழியர் ஈகர் கௌசென்கோ கனடாவுக்குத் தப்பியோடி, வட அமெரிக்காவில் சோவியத் உளவுகளை வெளிப்படுத்தினார். பனிப்போர் ஆரம்பத்துக்கு இது வழிவகுத்தது.
Events
1945
செப்டம்பர் 5
1945
செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1945 பனிப்போர்: யுகோசுலாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அரசுத்தலைவர் யோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார். ஏப்பிரல் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 பனிப்போர்: அமெரிக்க இராணுவம் செருமனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது. நவம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 பனிப்போர்: யுகோசுலாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு நாட்டில் பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, மாக்கடோனியா, மொண்டெனேகுரோ, செர்பியா, சுலோவீனியா என ஆறு குடியரசுகள் நிறுவப்பட்டன. சனவரி 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 பனிப்போர்: வின்ஸ்டன் சர்ச்சில் மிசோரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது "இரும்புத் திரை" என்ற பதத்தைப் பயன்படுத்தினார். மார்ச்சு 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 பனிப்போர்: பன்னாட்டளவில் அணுக்கரு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா வெளியிட்டது. மார்ச்சு 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட செருமனியின் பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 பனிப்போர்: நடுவண் ஒற்று முகமையை அமைக்கும் சட்டமூலத்தில் அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் கையெழுத்திட்டார். சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 பனிப்போர்: உருமேனியாவின் மன்னர் முதலாம் மைக்கேல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். திசம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 5 அன்று மேலும்
- 917 லியூ யான் தன்னை பேரரசராக அறிவித்து தெற்கு ஹான் பேரரசை தெற்கு சீனாவில் உருவாக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 தொம்மாசோ கம்பனெல்லா, இத்தாலியக் கலைஞர், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 1639) பிறப்புகள்
- 1638 பிரான்சின் பதினான்காம் லூயி (இ. 1715) பிறப்புகள்
- 1661 பதினான்காம் லூயி நாந்து நகரில் மசுகெத்தியர்களினால் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1666 இலண்டனில் பரவிய பெரும் தீ அணைந்தது. 10,000 கட்டடங்கள், 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 8 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1697 பிரான்சியப் போர்க்கப்பல் அட்சன் குடாவில் (இன்றைய கனடாவில்) ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1698 உருசியப் பேரரசர் முதலாம் பேதுரு அவரது பிரபுத்துவத்தை மேற்கத்தியமயமாக்கும் முயற்சியில் தாடி வைத்திருப்போருக்கு (மதகுருக்கள், மற்றும் விவசாயிகள் நீங்கலாக) வரி அறவிட உத்தரவிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1725 பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னருக்கும் மரியா லெசுச்சின்சுகாவுக்கும் திருமணம் நடந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பனிப்போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.