தமிழ் பைபிள் வசனங்கள் -1 தெசலோனிக்கேயர் 52:5:17
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
Pray without ceasing.
1 தெசலோனிக்கேயர் – அதிகாரம் 5
5:18 எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
5:19 ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
5:20 தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.
5:21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
5:22 பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.