மேஷம்
· Mesham (Aries)
★★★☆☆
மேஷ ராசி நண்பர்களே, நண்பர்களின் ஆதரவால் காரிய வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். பணவரவு நன்றாக இருக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். சந்திராஷ்டமம்: திங்கட் கிழமை 06:38 AM முதல் செவ்வாய்க் கிழமை 09:21 AM வரை; அந்நாட்களில் கவனம் தேவை.
ரிஷபம்
· Rishabam (Taurus)
★★★★☆
ரிஷப ராசி நண்பர்களே, எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். உடல் நலனில் அலட்சியம் வேண்டாம். சந்திராஷ்டமம்: செவ்வாய்க் கிழமை 09:21 AM முதல் வியாழக் கிழமை 10:18 PM வரை; அந்நாட்களில் கவனம் தேவை.
மிதுன ராசி நண்பர்களே, தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உறவினர்களால் மறைமுக பிரச்சனைகள் வரலாம். வரவுக்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். சந்திராஷ்டமம்: வியாழக் கிழமை 10:18 PM முதல் ஞாயிற்றுக் கிழமை 10:37 AM வரை; அந்நாட்களில் கவனம் தேவை.
கடகம்
· Kadagam (Cancer)
★★★☆☆
கடக ராசி நண்பர்களே, காரியங்களில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனைகள் தலைதூக்கும். சேமிப்பு உயரும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும். உடல் நலனில் கவனம் தேவை. சந்திராஷ்டமம்: ஞாயிற்றுக் கிழமை 10:37 AM முதல் திங்கட் கிழமை 06:37 AM வரை; அந்நாட்களில் கவனம் தேவை.
சிம்ம ராசி நண்பர்களே, இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உறவினர்கள் வழியில் நற்செய்தி கிடைக்கும். தேவையின்றி கடன் வாங்காதீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்கும் முன் யோசிக்கவும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் சிக்கல்கள் வரலாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும்.
கன்னி
· Kanni (Virgo)
★★★★☆
கன்னி ராசி நண்பர்களே, எதிலும் பொறுமையாக செயல்படவும். குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவு உண்டு. உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரித்து சோர்வு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். நேரத்திற்கு உணவு உண்பது அவசியம்; அஜீரணக் கோளாறுகள் வரலாம்.
துலாம் ராசி நண்பர்களே, புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். மனதில் புத்துணர்ச்சி பிறக்கும்.
விருச்சிக ராசி நண்பர்களே, தன்னம்பிக்கை அதிகரித்து செயல்களில் வேகம் கூடும். குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். கொடுத்த கடன் திரும்ப வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில் வியாபாரம் சிறப்படையும். போதிய ஓய்வு எடுத்துக்கொள்ளவும்.
தனுசு
· Dhanusu (Sagittarius)
★★☆☆☆
தனுசு ராசி நண்பர்களே, பழைய பிரச்சனைகள் மெல்ல மெல்ல தீரும். பெற்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். கூட்டாளிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கவும். சிறு உடல் சோர்வு வந்து நீங்கும்.
மகரம்
· Magaram (Capricorn)
★★★★☆
மகர ராசி நண்பர்களே, யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பெற்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். பணியிடத்தில் பிறர் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க நேரலாம். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கூர்மையான பொருட்களை கவனமாக கையாளவும்.
கும்ப ராசி நண்பர்களே, முன் கோபத்தால் பிரச்சனைகள் வரக்கூடும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் சாதகமாக முடியும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் தவிர்க்கவும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பழைய உடல் உபாதைகள் தலைதூக்கலாம்; மருத்துவ ஆலோசனை பெறவும்.
மீனம்
· Meenam (Pisces)
★★★☆☆
மீன ராசி நண்பர்களே, புதிய முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். குடும்பத்தில் யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். திடீர் மருத்துவ செலவு வரலாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. கூட்டாளிகளிடம் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.