மேஷம்
· Mesham (Aries)
★★★★☆
மேஷ ராசி நண்பர்களே, புதிய முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் சாதகமாக முடியும். பணவரவு சீராக இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடப்பதால் உடல்நலனிலும் முடிவுகளிலும் நிதானம் அவசியம்.
ரிஷபம்
· Rishabam (Taurus)
★★★☆☆
ரிஷப ராசி நண்பர்களே, மனதில் சிறு குழப்பங்கள் வந்து போகும். பிள்ளைகளால் பெருமை சேரும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். பணியிடத்தில் பிறர் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க நேரலாம். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்க இறைவழிபாட்டில் ஈடுபடவும். ஏழரைச் சனியின் தொடக்கக் காலம் (விரயச் சனி) என்பதால் செலவுகளில் கட்டுப்பாடும் பயணங்களில் கவனமும் தேவை.
மிதுன ராசி நண்பர்களே, வீண் அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படலாம். பிள்ளைகளால் பெருமை சேரும். சேமிப்பு உயரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் சிக்கல்கள் வரலாம். மனதில் புத்துணர்ச்சி பிறக்கும்.
கடகம்
· Kadagam (Cancer)
★★☆☆☆
கடக ராசி நண்பர்களே, தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க தாமதமாகும். சிறு உடல் சோர்வு வந்து நீங்கும்.
சிம்ம ராசி நண்பர்களே, நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். குடும்பத்தில் யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். திடீர் மருத்துவ செலவு வரலாம். மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.
கன்னி
· Kanni (Virgo)
★★★★☆
கன்னி ராசி நண்பர்களே, மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் வழியில் நற்செய்தி கிடைக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்கும் முன் யோசிக்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். நேரத்திற்கு உணவு உண்பது அவசியம்; அஜீரணக் கோளாறுகள் வரலாம். அஷ்டமச் சனி நடப்பதால் எதிலும் அவசரம் வேண்டாம்; உடல்நலனிலும் பயணங்களிலும் கூடுதல் கவனம் தேவை.
துலாம் ராசி நண்பர்களே, காரியங்களில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். சுபச் செலவுகள் ஏற்படும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும். கூர்மையான பொருட்களை கவனமாக கையாளவும். கண்டகச் சனி நடப்பதால் கணவன் மனைவி உறவிலும் கூட்டுத் தொழிலிலும் விட்டுக்கொடுத்து செல்லவும்.
விருச்சிக ராசி நண்பர்களே, புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். உறவினர்களால் மறைமுக பிரச்சனைகள் வரலாம். பணத்தட்டுப்பாடு குறையும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
· Dhanusu (Sagittarius)
★★☆☆☆
தனுசு ராசி நண்பர்களே, எதிலும் பொறுமையாக செயல்படவும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனைகள் தலைதூக்கும். தேவையின்றி கடன் வாங்காதீர்கள். உத்யோக மாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை.
மகரம்
· Magaram (Capricorn)
★★★★☆
மகர ராசி நண்பர்களே, சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும். அலுவலக ரகசியங்களை பகிர வேண்டாம். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். பழைய உடல் உபாதைகள் தலைதூக்கலாம்; மருத்துவ ஆலோசனை பெறவும். அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால் தாயார் உடல்நலம், வீடு, வாகன விஷயங்களில் கவனம் தேவை.
கும்ப ராசி நண்பர்களே, பழைய பிரச்சனைகள் மெல்ல மெல்ல தீரும். குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரித்து சோர்வு உண்டாகும். கூட்டாளிகளிடம் கவனமாக இருக்கவும். உடல் உபாதைகள் நீங்கும்.
மீனம்
· Meenam (Pisces)
★★★☆☆
மீன ராசி நண்பர்களே, யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பெற்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும். உடல் நலனில் அலட்சியம் வேண்டாம். சந்திராஷ்டமம்: புதன் கிழமை 05:46 AM முதல் சனிக் கிழமை 05:54 AM வரை; அந்நாட்களில் கவனம் தேவை. ஏழரைச் சனியின் இறுதிப் பகுதி (பாதச் சனி) என்பதால் பேச்சிலும் பண விஷயத்திலும் கவனம் தேவை.