அத்தியாயம் 8 · Surah Al-Anfaal · வசனம் 2
வெற்றிப்பொருள்கள் 8:2 · Quran 8:2 in Tamil
إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتۡ قُلُوبُهُمۡ وَإِذَا تُلِيَتۡ عَلَيۡهِمۡ ءَايَٰتُهُۥ زَادَتۡهُمۡ إِيمَٰنٗا وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ
2. உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்,) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்.
வெற்றிப்பொருள்கள் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 8:3 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 8:3 · 3. அவர்கள் தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.
- 8:4 · 4. இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும் மன்னிப்பும் உண்டு; இன்னும், கண்ணியமான உணவும் உண்டு.
- 8:5 · 5. (நபியே!) உமது இறைவன் உமது இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உம்மை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உம்முடன் வர) விரும்பாதவாறே,
- 8:6 · 6. (போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உம்முடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்களால் காணும் மரணத்தி...
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.