Skip to content

Popular

அத்தியாயம் 77 · Surah Al-Mursalaat in Tamil

المرسلات

அனுப்பப்படுபவை

The Emissaries

50 வசனங்கள் மக்கீ (மக்காவில் அருளப்பட்டது)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا 1

    1. நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக!

    வசனம் 77:1 · பகிர் ›

  2. فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا 2

    2. இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக!

    வசனம் 77:2 · பகிர் ›

  3. وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا 3

    3.(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக!

    வசனம் 77:3 · பகிர் ›

  4. فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا 4

    4. (உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக!

    வசனம் 77:4 · பகிர் ›

  5. فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا 5

    5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!

    வசனம் 77:5 · பகிர் ›

  6. عُذۡرًا أَوۡ نُذۡرًا 6

    5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!

    வசனம் 77:6 · பகிர் ›

  7. إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ 7

    7. நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.

    வசனம் 77:7 · பகிர் ›

  8. فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ 8

    8. அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.

    வசனம் 77:8 · பகிர் ›

  9. وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ 9

    9. அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்.

    வசனம் 77:9 · பகிர் ›

  10. وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ 10

    10. அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்.

    வசனம் 77:10 · பகிர் ›

  11. وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ 11

    11. அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.

    வசனம் 77:11 · பகிர் ›

  12. لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ 12

    12. (இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)?

    வசனம் 77:12 · பகிர் ›

  13. لِيَوۡمِ ٱلۡفَصۡلِ 13

    13. தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான்!

    வசனம் 77:13 · பகிர் ›

  14. وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ 14

    14. (நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா?.

    வசனம் 77:14 · பகிர் ›

  15. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 15

    15. (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

    வசனம் 77:15 · பகிர் ›

  16. أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ 16

    16. (அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா?

    வசனம் 77:16 · பகிர் ›

  17. ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ 17

    17. அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்,

    வசனம் 77:17 · பகிர் ›

  18. كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ 18

    18. (அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.

    வசனம் 77:18 · பகிர் ›

  19. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 19

    19. ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

    வசனம் 77:19 · பகிர் ›

  20. أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ 20

    20. ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா?

    வசனம் 77:20 · பகிர் ›

  21. فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ 21

    21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,

    வசனம் 77:21 · பகிர் ›

  22. إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ 22

    21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,

    வசனம் 77:22 · பகிர் ›

  23. فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ 23

    23. பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்.

    வசனம் 77:23 · பகிர் ›

  24. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 24

    24. ஆகவே, (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

    வசனம் 77:24 · பகிர் ›

  25. أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا 25

    25, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?

    வசனம் 77:25 · பகிர் ›

  26. أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا 26

    25, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?

    வசனம் 77:26 · பகிர் ›

  27. وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا 27

    27. அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம்.

    வசனம் 77:27 · பகிர் ›

  28. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 28

    28. (நம் அருட்கொடைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

    வசனம் 77:28 · பகிர் ›

  29. ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ 29

    29. ‘‘எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன் பாலே நீங்கள் செல்லுங்கள்.

    வசனம் 77:29 · பகிர் ›

  30. ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ 30

    30. மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்).

    வசனம் 77:30 · பகிர் ›

  31. لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ 31

    31. அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.

    வசனம் 77:31 · பகிர் ›

  32. إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ 32

    32. (எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும்.

    வசனம் 77:32 · பகிர் ›

  33. كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ 33

    33. அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.

    வசனம் 77:33 · பகிர் ›

  34. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 34

    34. (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

    வசனம் 77:34 · பகிர் ›

  35. هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ 35

    35. இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.

    வசனம் 77:35 · பகிர் ›

  36. وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ 36

    36. மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.

    வசனம் 77:36 · பகிர் ›

  37. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 37

    37. (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

    வசனம் 77:37 · பகிர் ›

  38. هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ 38

    38. இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.

    வசனம் 77:38 · பகிர் ›

  39. فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ 39

    39. ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்).

    வசனம் 77:39 · பகிர் ›

  40. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 40

    40. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

    வசனம் 77:40 · பகிர் ›

  41. إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ 41

    41. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்.

    வசனம் 77:41 · பகிர் ›

  42. وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ 42

    42. அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.

    வசனம் 77:42 · பகிர் ›

  43. كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ 43

    43. (அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்).

    வசனம் 77:43 · பகிர் ›

  44. إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ 44

    44. இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்.

    வசனம் 77:44 · பகிர் ›

  45. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 45

    45. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

    வசனம் 77:45 · பகிர் ›

  46. كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ 46

    46. (இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்.

    வசனம் 77:46 · பகிர் ›

  47. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 47

    47. (இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

    வசனம் 77:47 · பகிர் ›

  48. وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ 48

    48. அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்.

    வசனம் 77:48 · பகிர் ›

  49. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 49

    49. (அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

    வசனம் 77:49 · பகிர் ›

  50. فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ 50

    50. இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ!

    வசனம் 77:50 · பகிர் ›

114 அத்தியாயங்கள் · All surahs ›

அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.