அத்தியாயம் 72 · Surah Al-Jinn · வசனம் 2
ஜின்கள் 72:2 · Quran 72:2 in Tamil
يَهۡدِيٓ إِلَى ٱلرُّشۡدِ فَـَٔامَنَّا بِهِۦۖ وَلَن نُّشۡرِكَ بِرَبِّنَآ أَحَدٗا
2. அது நேரான வழியை அறிவிக்கிறது. ஆகவே, அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் அறவே இணையாக்க மாட்டோம்.
ஜின்கள் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 72:3 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 72:3 · 3. நிச்சயமாக எங்கள் இறைவனுடைய மகத்துவம் மிக்க மேலானது. அவன் எவரையும் (தன்) மனைவியாகவோ, குழந்தையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.
- 72:4 · 4. மேலும், நிச்சயமாக நம்மிடமுள்ள மடையன் அல்லாஹ்வின் மீது (அவனுடைய பரிசுத்தத் தன்மைக்குத்) தகாத விஷயங்களைக் கூறுகிறவனாக இருந்தான்.
- 72:5 · 5. மனிதர்களும், ஜின்களும் நிச்சயமாக அல்லாஹ் மீது பொய் கூறமாட்டார்கள் என்று மெய்யாகவே (இது வரை) நாங்கள் எண்ணிக்கொண்டு இருந்தோம்.
- 72:6 · 6. மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே (தங்களை) பாதுகாக்கக் கோருகின்றனர். எனவே, மனிதர்கள் அந்த ஜின்களுக்கு கர்வத்தை அதிகப்படுத்தி வி...
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.