அத்தியாயம் 55 · Surah Ar-Rahman · வசனம் 35
அளவற்ற அருளாளன் 55:35 · Surah Ar-Rahman 55:35 in Tamil
يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ
35. (நீங்கள் அவற்றை விட்டும் வெளிப்பட விரும்பிச் சென்றால்) உங்கள் மீது அக்னி ஜூவாலையும், உருக்கப்பட்ட செம்பும் எறியப்படும். அதை நீங்கள் தடுத்துக்கொள்ள முடியாது.
அளவற்ற அருளாளன் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 55:36 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 55:36 · 36. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
- 55:37 · 37. (யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜைத்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும்.
- 55:38 · 38. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
- 55:39 · 39. அந்நாளில், மனிதனிடமும், ஜின்னிடமும் அவர்களின் பாவத்தைப் பற்றிக் கேட்கப்பட மாட்டாது. (அவர்களின் குறிப்பைக் கொண்டே அறிந்து கொள்ளப்படும்.).
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.