அத்தியாயம் 20 · Surah Taa-Haa · வசனம் 72
தாஹா 20:72 · Quran 20:72 in Tamil
قَالُواْ لَن نُّؤۡثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلَّذِي فَطَرَنَاۖ فَٱقۡضِ مَآ أَنتَ قَاضٍۖ إِنَّمَا تَقۡضِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَآ
72. அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ முடிவு செய்துகொள். நீ முடிவு செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான்.
தாஹா – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 20:73 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 20:73 · 73. நிச்சயமாக நாங்கள் (மெய்யான) எங்கள் இறைவனையே நம்பிக்கை கொள்வோம். எங்கள் குற்றங்களையும் உன் நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன்...
- 20:74 · 74. உண்மையாகவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகம்தான் (கூலியாகும்). அதில் அவன் சாகவும் மாட்டான்; (சுகத்துடன்) வாழவும் மாட்டான்...
- 20:75 · 75. எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்து (தன் இறைவனிடம்) வருகிறாரோ அவர்களுக்கு மேலான பதவிகள் இருக்கின்றன.
- 20:76 · 76. (மறுமையிலோ அவர்களுக்கு) ‘அத்ன்' என்ற நிலையான சொர்க்கங்கள் உள்ளன. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்...
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.